300 பயணிகளுடன் சென்ற விமானத்திற்கு நடுவானில் ஏற்பட்ட கதி! கதறி அழும் பெண்

474shares

காலநிலை காரணமாக தரையிறங்க முடியாமல் விமானம் நடுவானில் தத்தளித்த நிலையில் பயணி ஒருவர் உயிர் பயத்தில் கதறி அழும் காணொளி வெளியாகியுள்ளது.

ஸ்பெயினிலிருந்து நெதர்லாந்து பயணித்த விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

300 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் யூரோபா விமனாம் மாட்ரிட்டில் இருந்து ஆம்ஸ்டர்டாமிற்கு நேற்று (9) மதியம் பயணத்தை ஆரம்பித்தது.

விமானம் ஐந்து முறை ஆம்ஸ்டர்டாமில் தரையிறங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமானி இறுதியில் அவர்கள் புறப்பட்ட விமான நிலையத்திற்குத் திரும்ப முடிவு செய்தார், மீண்டும் மாட்ரிட்டில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.

வெளியான வீடியோவில், சியரா புயலின் பலத்த காற்றில் சிக்கிய விமானம், நடுவானில் மேலும் கீழும் பயங்கரமாக குலுங்குகிறது. விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் உயிர் பயத்தில் கதறி அழுகிறார்.

சம்பவம் குறித்து ஏர் யூரோபாவின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, மோசமான வானிலை காரணமாக மாட்ரிட்டில் இருந்து ஆம்ஸ்டர்டாம் செல்லும் விமானம் யுஎக்ஸ் 1093 ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தரையிறங்க முடியவில்லை, அதனால் மீண்டும் மாட்ரிட் திரும்பியது.

'பயணிகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர் மற்றும் மறுநாள் ஆம்ஸ்டர்டாம் பயணிப்பதற்கான மாற்று வழிகள் எங்கள் ஊழியர்களால் நிர்வகிக்கப்பட்டன என தெரிவித்துள்ளார்.

சியாரா புயலால் மணிக்கு 93 மைல் வேகத்தில் காற்று வீசுவதால் ஐரோப்பா முழுவதும் விமானங்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மான்செஸ்டர், பர்மிங்காம் மற்றும் பிராங்பேர்ட் உள்ளிட்ட விமான நிலையங்களில் பல விமானங்கள் ஆபத்தான முறையில் தரையிறக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி பீதியை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.


you may like this

Tags : #Spain
இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி