கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் சீன மருத்துவர்களின் நிலை! வெளிவந்துள்ள புகைப்படங்களால் காணப்படும் பரிதாபம்

693shares

சீனாவை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸிற்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடி வருகின்றார்கள்.இதிலும் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் பணியாளர்களின் செயற்பாடு சொல்லில் அடங்காது.

அவர்கள் தமது வாய்,கண்கள் மற்றும் முகத்தை மறைக்க நீண்டநேரம் செலவிடுகின்றார்கள்.நோயாளியை குணப்படுத்துவதோடு தமது சொந்த பாதுகாப்பிலும் கவனம் செலுத்துகிறார்கள்.

வைரஸ் தொற்றை கையாள்வதில் தொடர்புடைய உணர்ச்சி மற்றும் மன அழுத்தத்திற்கு மேலதிகமாக அவர்கள் பணியாற்றுகின்றனர்.

பல மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனைகளில் கிடைக்கும் பாதுகாப்பு உபகரணங்களால் தமது முகத்தை மறைக்கின்றனர்.

இவ்வாறு நீண்டநாட்களாக முகத்தை மூடியே சேவையாற்றிவரும் அவர்களின் முகங்களில் காயங்கள் மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளமை வெளிவந்துள்ள படங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்