சீறிப் பாய்ந்த ஏவுகணைகள்.. ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத்தளம் மீது இன்று அதிகாலை சரமாரி தாக்குதல்..

417shares

ஈராக்கில் இருக்கும் அமெரிக்க இராணுவ படை தளம் மீது இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈராக்கில் இருக்கும் அமெரிக்க ராணுவ படை தளம் மீது இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

கிர்கிக் பகுதியில் இந்த ஏவுகணை தாக்குதல் நடந்தது. இதில் எத்தனை பேர் பலியானார்கள் என்று விவரம் வெளியாகவில்லை.

மொத்தம் 6 ஏவுகணைகள் குறி வைத்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அமெரிக்கா படைத்தளம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.

ஈரான் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. ஈரான் அரசு சார்பாக யாரும், நாங்கள்தான் தாக்கினோம் என்று கூறவில்லை.

இந்த தாக்குதலை ஈரான்தான் நடத்தியது என்று செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கிறது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் வெளியாகவில்லை.

ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று ஈரான் கோரிக்கை வைத்து வருகிறது. அங்கிருந்த அமெரிக்க படைகளை வெளியேற்றினால்தான் தாக்குதல் நிற்கும் என்று ஈரான் கூறிவிட்டது.

இதனால் இன்று தாக்குதல் நடந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதேபோல்,சமயத்தில் சுலைமானி பலியானதன் 40வது நாள் இரங்கல் நேற்று நடைபெற்றது.

அதற்கான பழி வாங்கல் நிகழ்வாக இந்த தாக்குதல் இருக்கலாம் என கூறப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்