சாதித்தார்கள் சீன மருத்துவர்கள்! வெளியானது மகிழ்ச்சிக்குரிய செய்தி

5280shares

ஆப்பிரிக்க நாடான கேமரூனைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமடைந்துள்ளார்.

இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது சீன மருத்துவர்களே தான்.

"என்ன நடந்தாலும் பரவாயில்லை, நான் நோயை ஆப்பிரிக்காவுக்கு கொண்டு செல்ல விரும்பவில்லை," என்று கெம் செனு பாவெல் டேரில் என்ற மாணவன் தனது பல்கலைக்கழக ஓய்வறையில் இருந்து கூறினார்.

அங்கு அவர் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அங்கு அவர் காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் அவதிப்பட்டு வந்தார்.

13 நாட்கள் அவர் உள்ளூர் சீன மருத்துவமனையில் தனிமையில் இருந்தார்.

எச்.ஐ.வி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பொதுவாக பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் மருந்துகள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவருக்கு அளிக்கப்பட்ட சி.டி ஸ்கேன் நோயின் எந்த தடயத்தையும் காட்டவில்லை. கொடிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க நபராகவும், குணமடைந்த முதல் நபராகவும் கெம் செனு பாவெல் டேரில் ஆனார்.

ஆனால் அவரது மருத்துவ பராமரிப்பு குறித்த தகவல்களை சீன அரசு வெளியிட மறுத்துவிட்டது.

அனைத்து மருத்துவமனைக் கட்டணங்களும் சீன அரசாங்கத்தால் இலவசமாக அளிக்கப்பட்டு தற்போது முழுமையாக குணம் அடைந்து உள்ளார் 'கெம் செனு பாவெல் டேரில்'.

எவ்வாறாயினும் இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண்ணை இலங்கை மருத்துவர்களும் அவரை முழுமையாக குணமடையச் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


you may like this

Tags : #Covid-19 # #China
இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

பில் கேட்ஸ் கொடுத்த நிதியினால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரானது! முதல் நபருக்கு பரிசோதனை

பில் கேட்ஸ் கொடுத்த நிதியினால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரானது! முதல் நபருக்கு பரிசோதனை