மிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்

219shares

ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 454 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

ஹொங்கொங்கில் இருந்து திரும்பிய சொகுசு கப்பலான டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் 80 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், ஜப்பான் துறைமுகத்தில் அனுமதி மறுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கப்பலில் பயணித்த 3,711 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பரிசோதனை நிறைவடைந்த நிலையில் 5 இந்தியர்கள் உட்பட 454 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை குறித்த கப்பலில் இருந்த 400 அமெரிக்கர்களை நேற்றையதினம் அந்நாடு ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்டு தமது நாட்டுக்கு கொண்டு சென்றுள்ளது.

இதேவேளை இந்த கப்பலில் இரண்டு இலங்கையர் உள்ளதாகவும் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையென ஸ்ரீலங்கா வெளிறவு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

பில் கேட்ஸ் கொடுத்த நிதியினால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரானது! முதல் நபருக்கு பரிசோதனை

பில் கேட்ஸ் கொடுத்த நிதியினால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரானது! முதல் நபருக்கு பரிசோதனை