தனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன? வெளியேறிய பயணிகள் பகீர் தகவல்

276shares

கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஜப்பானில் நங்ககூரமிடப்பட்டுள்ள டயமண்ட் பிறின்சஸ் கப்பலில் இருந்து முதல் கட்டமாக நூறு பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கொரோனாதொற்றுக்கு உள்ளாகாத பயணிகளே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கொரோனாஉயிர்கொல்லி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட டயமண்ட் பிறின்சஸ் கப்பல் கடந்த 14 நாட்களாக ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

இந்தக்கப்பலில் பயணித்த பயணிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் என 542 பேர் கொவிட் 19 என்ற இந்தவைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவிற்குவெளியே அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய சம்பவமாக இது பதிவாகியுள்ளது.

கப்பல் தனிமைப்படுத்தப்பட்ட 14 நாட்களும் தாம் நெருக்கடியான நிலைமையை எதிர்கொண்டதாக பயணிகள்கூறியுள்ளனர்.

கொரோனாதொற்றினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையில்,கப்பலில் உள்ள தமது நாட்டுப் பிரஜைகளை பல்வேறு நாடுகள் தொடர்ந்தும் வெளியேற்றிவருகின்றன.

முதல்கட்டமாக கப்பலில் இருந்த தமது நாட்டுப் பிரஜைகள் 100 பேரை வெளியேறியுள்ள அமெரிக்கா,அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்துவருகின்றது.

அத்துடன்டயமண்ட் பிறின்சஸ் கப்பலில் உள்ள தமது நாட்டுப் பிரஜைகள் 74 பேரையும் இவ்வார இறுதியில்நாட்டிற்கு அழைத்துவர முடியும் என பிரித்தானிய நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கப்பலில்இருந்து வெளியேற்றப்படும் தமது நாட்டுப் பிரஜைகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு,கண்காணிக்கப்படுவார்கள் என அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா ஆகியநாடுகள் அறிவித்துள்ளன.


you may like this

Tags : #Covid-19 # #Japan
இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி