கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

953shares

நாணய தாள்கள் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளதால் சீனாவில் நாணய தாள்களை அழிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் பலி எண்ணிக்கை 2000 ஐ தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க உலக நாடுகள் முன்னெச்சரிக்கையாக செயற்பட்டுவந்தாலும் 25 இற்கு மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் தொற்றிக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி தும்மினாலோ, இருமினாலோ அதனால் வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் வழியாகக் கூட கொரோனா பரவும் வாய்ப்புள்ளது.

இதனால் நுண் எச்சில் நீர் துகள்கள் படிந்த நாணய தாள்கள் மூலமாகவும் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. எனவே, ஹூபெய் மாகாணத்தின் மருத்துவமனை, ஷாப்பிங் மால்கள், பேருந்துகள் போன்றவற்றில் வசூலான நாணய தாள்களை அழிக்க சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

அதன் அடிப்படையில் சீன நாணய தாள்களான 600 பில்லியன் யுகான் அதாவது அமெரிக்க டொலர் மதிப்பில் சுமார் 85.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அழிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று பாதிப்புள்ள பகுதியில் உள்ள வங்கிக்கு வரும் நாணய தாள்களை 14 நாட்கள் அல்ட்ரா வைலட் கதிர்கள் மற்றும் அதிக வெப்பத்தில் வைத்து தாள்களை அழிக்க அனைத்து வங்கிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


you may like this

Tags : #Covid-19 #China #
இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!