வழி தெரியாமல் தடுமாறிய சீனா! வேறு வழியின்றி அவசர அவசரமாக எடுக்கப்பட்டுள்ள முடிவு- சீன மக்களுக்கு ஏற்பட்ட நிலை

1480shares

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நிலை தடுமாறிக் கொண்டிருந்த சீன அரசாங்கம் வனவிலங்குகளை விற்பனை செய்வதை முழுமையாக தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த 60 நாட்களுக்கு ஒட்டுமொத்த நாடுகளையும் ஆட்டம் காணச் செய்திருக்கிறது கொரோனா வைரஸ். தற்போது வரை 30 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 77,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சீனாவில் மாத்திரம் இதுவரை 2592 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேகமாகப் பரவிவரும் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான முழுமையான முயற்சிகளை சீன அரசாங்கம் எடுத்திருந்தாலும் அதில் வெற்றி கொள்ள முடியாமல் திணறுகிறது அந்நாடு. இந்தநிலையில், வைரஸ் தொற்றானது வன விலங்குகளிலிருந்து பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனினும் சீன மக்களிடையே வன விலங்குகளை உணவாக உட்கொள்ளும் பழக்கம் அதிகளவில் காணப்படுகின்றன. இதனையடுத்து, சீனாவில் வனவிலங்குகளை விற்பனை செய்வதை முழுமையாக தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உயர்மட்ட குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதேவேளை சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர இலங்கை வௌிவிவகார அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

எவ்வாறாயினும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர், தமது உணவுப் பழக்கவழக்கங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று சீன அரசாங்கம் உலக நாடுகளிடையே கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


you may like this

Tags : #Covid-19 # #China
இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!