உலக நாடுகளை முற்றாக முடக்கியது கொரோனா! ரஷ்யா தப்பியது எப்படி? வெளியானது ரகசியம்

636shares

உலக நாடுகள் பலவற்றில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் ரஷ்யாவில் மட்டும் அதன் தாக்கம் குறைவாக இருப்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

ரஷ்யாவின் மக்கள்தொகை 14.6 கோடியாக உள்ளது. மேலும் சீனாவுடன், சுமார் 4,200 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட எல்லைப் பரப்பைக் கொண்டுள்ளது.

ஆனாலும் கூட, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக குறைவாக உள்ளது. ரஷ்யாவில், இதுவரை 306 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் உலகிலேயே, கொரோனா குறைவாக பதிவாகியுள்ள இரண்டாவது நாடு ரஷ்யா ஆகும். முதலாவது நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது. அங்கு 0.11% என்ற அளவில் பாதிப்பு இருந்தது.

இதுவரை ரஷ்யாவில் 133,101 பேருக்கு கரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா பரவத் தொடங்கியதுமே ரஷ்ய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் அங்கு நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.

ஜனவரி 30-ம் திகதிக்கு முன்னதாக சீனாவுடனான அதன் 4,200 கிலோமீட்டர் தூர எல்லையை ரஷ்யா மூடிவிட்டது.

புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்கா மார்ச் மாத தொடக்கத்தில் மட்டுமே கொரோனா வைரஸ் சோதனையின் வேகத்தை அதிகரித்தது. அதே நேரத்தில் பெப்ரவரி தொடக்கத்தில் இருந்து விமான நிலையங்கள் உட்பட்ட பகுதிகளில், ஈரான், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பயணிகளை இலக்கு வைத்து, அவர்களிடத்தில் சோதனை நடத்தப்பட்டது.

இதுபோன்ற காரணங்களால் அந்த நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்தது என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ) பிரதிநிதி மருத்துவர் மெலிடா உஜ்னோவிக் கூறுகையில், ரஷ்யா உண்மையில் ஜனவரி மாத இறுதியிலேயே தனது கெடுபிடிகளை தொடங்கிவிட்டது.

சோதனையை தாண்டி ரஷ்யா பரந்த அளவிலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது பாராட்டத்தக்கது. இதனால் இந்த கொடிய வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது என கூறியுள்ளார்.

இதேபோன்று மேலும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகள்,

இதையும் தவறாமல் படிங்க
கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

யாழில் தரக்குறைவாக பேசியவரை புரட்டியெடுத்த இளம் யுவதி!

யாழில் தரக்குறைவாக பேசியவரை புரட்டியெடுத்த இளம் யுவதி!