இத்தாலி தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்! மரண பீதியில் உலக நாடுகள்

1037shares

இத்தாலியில் தற்போது கொரோனா வைரஸுக்குப் பதிவு செய்யப்படும் எண்ணிக்கையை விட, பாதிப்பு இன்னும் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டாலும் உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றது.

அதிலும் குறிப்பாக இத்தாலி பிரானஸ் ஸ்பெயின் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்து வருகின்றது.

ஸ்ரீலங்காவிலும் தற்போதுவரை 102 கெரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இத்தாலி தொடர்பில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை வெளியான தகவல்களின்படி இத்தாலியில் 6000 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் சுமார் 63,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,000 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஆனால் கொரோனா வைரஸால் தற்போது பதிவு செய்யப்படும் எண்ணிக்கையை விட பாதிப்பு இன்னும் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று இத்தாலி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஏஞ்சலோ போரேலி கூறும்போது, “10-ல் ஒருவருக்கு தொற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு இருந்தால் இத்தாலியில் சுமார் 6 லட்சத்துக்கு அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம். என தெரிவித்துள்ளார்.


You May Like This

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!