மர்மமாகக் கிடந்த 64 சடலங்கள்! மொசாம்பிக் கப்பல் கொள்கலனுக்குள் வந்தது எப்படி?

809shares

மொசாம்பிக்கில் கப்பல் கொள்கலனில் இருந்து 64 குடியேற்றவாசிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த குடியேற்றவாசிகளின் சடலங்கள் மொசாம்பிகன் குடிவரவு அதிகாரிகளால் நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாக ஐ.நா.வின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மலாவியிலிருந்து மொசாம்பிக்கிற்குள் சென்ற லொறியில் பொருத்தப்பட்டிருந்த கப்பல் கொள்கலன்களில் இருந்தே இவ்வாறு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான முதற் கட்ட விசாரணைகளின் போது உயிரிழந்தவர்கள் எத்தியோப்பியாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் இவர்கள் மூச்சுத் திணறல் காரணமாக உயிரழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுவதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மொசாம்பின் அதிகாரிகள் குறித்த வாகனத்தை பரிசோதித்த போது, அதில் 14 பேர் உயிருடன் இருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி மற்றும் அவரது உதவியாளர், ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இதையும் தவறாமல் படிங்க
பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு  -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்