கொரோனாவை சர்வ சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்! தாயாரை நினைத்து கண் கலங்கி நிற்கும் வீரர்

46shares

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தன் தாயின் நிலை தொடர்பிலும், கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பிலும் அமெரிக்காவை சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீர்ர் Karl Anthony Townsன் கண்ணீரோடு காணொளியை வெளியிட்டிருக்கிறார்.

சீனாவின் வுகானில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகில் பல நாடுகள் முடங்கிப் போயிருக்கின்றன. பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. இத்தாலி, ஸ்பெயின் அமெரிக்கா ஈரான், என்று அடுத்தடுத்து பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல என்பிஏ வீரரான Karl Anthony Townsவின் தாயார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் காணொளி மூலமாக பேசியுள்ள அவர்,

“ என் பெற்றோருக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சில நாட்கள் ஆகியும் உடல்நலம் சரியாகாததால் மருத்துவமனைக்கு சென்றோம்.

என் தந்தைக்கு எந்த பிரச்சினையும் இல்லை என கூறிய மருத்துவர்கள் வீட்டிலேயே அவரை தனிமைப்படுத்தி கொள்ள வலியுறுத்தினார்கள்.

ஆனால் என் தாய்க்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் பல மருந்துகள் கொடுத்தும் குணமாகவில்லை. ஏதாவது ஒரு மருந்து தாயை குணமாக்கிவிடும் என நினைத்தும் அது நிறைவேறவில்லை.

பின்னர் அவரை கொரோனா வைரஸ் பாதித்துள்ளமை தெரியவந்தது, இதோடு கோமா நிலைக்கு என் தாய் சென்றுவிட்டார். ஆனால் என் தாய் மிகவும் தைரியமானவர், நிச்சயம் இதிலிருந்து அவர் விடுபடுவார்.

எல்லோரும் நான் சொல்வது என்னவென்றால், கொரோனாவை சாதாரணமாக எண்ண வேண்டாம், உங்கள் குடும்பத்தையும், நண்பர்களை பாதுகாப்பாக கவனித்து கொள்ளுங்கள்” என்று கண்ணீரோடு பேசியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

சற்றுமுன் கொரோனாவால் இலங்கையில் மற்றுமொருவர் உயிரிழப்பு

சற்றுமுன் கொரோனாவால் இலங்கையில் மற்றுமொருவர் உயிரிழப்பு