உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது!

214shares

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 294 ஆக அதிகரித்துள்ளதாக வேர்ல்ட் மீற்றர் இன்ஃபோ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

4 லட்சத்து 71 ஆயிரத்து 363 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 642 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் 7 ஆயிரத்து 503 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 74 ஆயிரத்து 386 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இத்தாலிக்கு அடுத்ததாக ஸ்பெயின் நாட்டிலேயே கொரோனா காரணமாக அதிகளவான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதுடன் அங்கு 3 ஆயிரத்து 647 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் 3 ஆயிரத்து 287 பேர் உயிரிழந்துள்ளதுடன் அங்கு புதிதாக 67 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா காரணமாக ஈரானில் 2 ஆயிரத்து 77 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் கொரோனா காரணமாக ஆயிரத்து 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா காரணமாக ஆயிரத்து 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் அங்கு புதிதாக 156 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா காரணமாக பிரித்தானியாவில் 465 பேர் உயிரிழந்துள்ளனர். ஜேர்மனியில் 206 பேர் உயிரிழந்துள்ளனர். சுவிஸர்லாந்தில் 465 பேர் உயிரிழந்துள்ளனர். நெதர்லாந்தில் 356 பேர் உயிரிழந்துள்ளனர். பொல்ஜியத்தில் 178 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவில் 131 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை தவிர ஒஸ்ரியாவில் 31 பேரும், கனடாவில் 36 பேரும்,போத்துக்கலில் 43 பேரும்,நோர்வேயில் 14 பேரும், அவுஸ்திரேலியாவில் 12 பேரும், பிரேசிலில் 59 பேரும், சுவிடனிலி் 62 பேரும், துருக்கியில் 59 பேரும், இஸ்ரேலில் 5 பேரும், மலேசியாவில் 20 பேரும், டென்மார்கில் 34 பேரும், அயர்லாந்தில் 9 பேரும், லக்சம்பேர்கில் 8 பேரும், ஜப்பானில் 45 பேரும், ஈக்குவடோரில் 29 பேரும்,சிலியில் 3 பேரும், பாகிஸ்தானில் 8 பேரும், போலந்தில் 14 பேரும், ரோமேனியாவில் 17 பேரும், தாய்லாந்தில் 4 பேரும், கிறீசில் 22 பேரும், பின்லாந்தில் 3 பேரும், சவுதியில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு அடுத்ததாக இந்தோனேசியாவில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். பிரின்ஸ் டயமன்ட் கப்பலில் 10 பேரும், இந்தியாவில் 12 பேரும், பிலிப்பைன்சில் 38 பேரும், சிங்கப்பூரில் 2 பேரும், பனாமா மற்றும் ஆர்ஜன்டீனாவில் தலா 8 பேரும் ஈராக்கில் 29 பேரும், அல்ஜீரியாவில் 21 பேரும், எகிப்தில் 21 பேரும் கொல்லப்படடுள்ளனர்.

மொத்தமாக உலகம் முழுவதும் இதுவரை 21 ஆயிரத்து 294 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்