கொரோனா தாக்கத்தில் ஏற்பட்டுள்ள முரண்! இளைஞர்களை அதிகம் தாக்கத் தொடங்கியது கோவிட்-19

53shares

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்று அந்நாட்டு அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1000 பேரில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். அவர்கள் அனைவரும் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இது இது தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் செயலாளர் சாபர் மிர்சா தகவல் வெளியிடும் போது,

“பாகிஸ்தானில் கோவிட்-19 காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 24% பேர் இளைஞர்கள். ஆனால், பிற நாடுகளில் வயதானவர்களே கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தானில் கோவிட்-19 பாதிப்புக்கு இதுவரை 1,093 பேர் பாதிக்கப்பட்டுள்ளர். 8 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோவிட் -19 காய்ச்சலால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மட்டும் சுமார் 400க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பாகிஸ்தானில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது முரணாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

சீனாவின் வுகான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் பலியானவர்களில் குறைந்தளவிலானோரே சிறு வயதினர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் 18 வயது இளைஞனும், லண்டனில் ஒரு யுவதியும், அமெரிக்காவில் 18 வயது இளைஞனும் பலியாகியிருந்தனர்.

தற்போது கொரோனாவின் தாக்கம் வேறு விதத்தில் வீரியம் பெற்று வளர்கிறதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!