ஒரே நாளில் மூன்று நாடுகளில் 1,795 பேரை பலியெடுத்தது கொரோனா! அச்சத்தில் உலக மக்கள்

891shares

கடந்த 24 மணி நேரத்திற்குள் இத்தாலியில் 712 பேர், ஸ்பெயினில் 718 பேர், பிரான்சில் 365 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 712 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் அந்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது.

ஸ்பெயினிலும் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 718 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 4,365 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் கொரோனா அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தாக்குதலுக்கு 365 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கையில் அமெரிக்கா சீனாவை விஞ்சியுள்ளது.

சீனாவில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 81,285. ஆனால் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,312 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82,523 என அதிரடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!