உலக நாடுகளுக்கு சீன அதிபர் விடுத்துள்ள அவசர அழைப்பு!

2847shares

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில், பொருளாதாரத்தைக் காக்க ஒன்றிணையுங்கள் என்று உலக நாடுகளுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.

சீனாவின் வுகானில் உருப்பெற்றதாக கூறப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பல ஆயிரம் உயிர்களை சர்வதேச நாடுகள் இழந்து நிற்கின்றன. தற்போது வரை 27,365 உயிரிழந்திருக்கிறார்கள்.

இதேவேளை, உலகம் முழுவதும் பல நாடுகள் முடக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பொருளாதாரத்தில் பாரியளவிலான வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச சந்தைகள் முடங்கிப் போயிருக்கின்றன.

இந்நிலையில், சீன அதிபர் தற்போது உலக நாடுகளுக்கு அவசர அழைப்பு விடுத்திருக்கிறார். அவர் பேசியதாக குறிப்பிட்டு சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களில்,

''பெரும் பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்த உலக நாடுகள் முன்வரவேண்டும். இதன் மூலம் கொரோனா தொற்று நோயால், உலகமே மந்தகதியில் உள்ள சூழலில், உலகின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும்.

உலகளாவிய சந்தையுடைய விநியோகச் சங்கிலியின் ஸ்திரத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

இதேவேளை, ஜி20 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சீன உறுப்பினரிடம் கட்டணங்களைக் குறைத்தல், தடைகளை நீக்குதல் மற்றும் வர்த்தகத்தை எளிதாக்குதல் ஆகியவற்றை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இறக்குமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகப்படுத்தவும் சார்பு நிதிக் கொள்கையை அமல்படுத்த ஊக்குவிக்கவும் சீனா தயாராக உள்ளது'' என்றும் ஜி ஜின்பிங் கருத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

ஸ்ரீலங்காவில் அமுலில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துகிறார் கோட்டாபய

ஸ்ரீலங்காவில் அமுலில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துகிறார் கோட்டாபய