உலகம் கொரோனாவால் திணறுகிறது- வட கொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன? மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்திய கிம் ஜான்

2446shares

உலகம் முழுவதும் கொரோனா வைரஸினால் திணறிக் கொண்டிருக்க, வட கொரியா மீண்டும் இன்று ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய உடனேயே தனது எல்லைகள் அனைத்தையும் வடகொரியா மூடுவதாக அறிவித்தது.

உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் இச்சூழலில் எந்தவிதமான பதற்றமும் இன்றி வடகொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

இதுகுறித்து தென் கொரிய ராணுவ படைப்பிரிவின் துணைத் தலைவர் கூறுகையில், “வான்சான் கடற்பகுதியில் 30 கி.மீ. உயரம், 230 தொலைவு சென்று தாக்கக் கூடிய குறுகிய தொலைவு ஏவுகணைகளை வடகொரியா இன்று பரிசோதனை செய்தது” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், “வடகொரியா இன்று குறுகிய தொலைவு சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணைகளை இன்று பரிசோதனை செய்தது. ஆனால், அந்த ஏவுகணை ஜப்பான் எல்லைக்குள் வரவில்லை. இந்த மாதத்தில் வடகொரியா பரிசோதனை செய்யும் 9-வது ஏவுகணை இதுவாகும்.

வடகொரிய அரசு தொடர்ந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவை அனைத்தையும் அதிபர் கிம் ஜான் உன் உன்னிப்பாக கவனித்து வருகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 21-ம் திகதி வடகொரியா கேஎன்-24 என்ற குறுகிய தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஏவுகணை சோதனை நடத்தி அண்டை நாடுகளுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து தனது முயற்சிகளை வடகொரிய கைவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பல ஆயிரம் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். லட்சக் கணக்கான மக்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் வடகொரியா அது தொடர்பில் எந்தவிதமான தகவல்களையும் தற்போது வரை வெளியிடவில்லை.

அதேபோன்று, அங்கு உண்மையில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது? வடகொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன என்பது தொடர்பிலும் சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றன.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி