அம்பலத்திற்கு வந்தது சீனாவின் கபட நாடகம்! உலகின் வெளிச்சத்துக்கு வந்தது இரக்கமற்ற குணம்....

2370shares

சீனாவின் பொருளாதார தந்திரம் தற்போது வெளியே வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகத்தில் அதிகாரியாக செயல்படும் ஸ்பெட்டேட்டர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் வுகானில் உருப்பெற்று உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று தற்போது வரவியிருக்கிறது. உலக வல்லரசுகள் யாவும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ஆரம்பத்தில் சீனாவிற்குள் ஏற்பட்ட அழிவினை கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் உதவிக்கரம் நீட்டியிருந்தன. அத்தோடு முன்னணியாக செயல்பட்டது இத்தாலி.

தன் நாட்டிலிருந்து முகக்கவசங்கள் உட்பட்ட பல சுகாதாரப் பொருட்களை உடனடியாக விரைந்து சீனாவிற்குள் அனுப்பி வைத்தது. இதிலிருந்து சீனாவும் மெல்ல மீண்டு தற்போது இயல்பு வாழ்க்கைக்குள் திரும்பியிருக்கிறது.

ஆனால் உலகின் 200 நாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சீனா தனது கபட நாடகத்தையும், பொருளாதார வேலையையும் காட்டத் தொடங்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகத்தி அதிகாரியாக பணிபுரியும், ஸ்பெட்டேட்டர் என்பவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தாமல், உலகிற்கே பரவ வைத்தது சீனா தான். தற்போது சீனாவில் பல இடங்களில் இயல்பு நிலை இருப்பதாக சீன அரசே கூறுகிறது. ஆனால், உலகின் எந்த நாட்டிலும் இயல்பு நிலை இல்லை. கொரோனா வைரஸை எதிர்கொள்ள முடியாமல் உலகமே தடுமாறுகிறது.

இந்த நேரத்தில் இந்த நோய் பரவியதற்கு காரணமான சீனா, நிச்சயம் மற்ற நாடுகளுக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால், இப்போதும் கூட பணத்திற்காக மருத்துவ உபகரணங்களை விற்க முயல்வதும், அதுவும் இலவசமாக கொடுத்த நாட்டிற்கே விற்க முயல்வதும், அதை வெளியே மறைத்து உதவி செய்வது போல நாடகம் ஆடுவதும் சீனாவின் ஈவிரக்கம் இல்லாத குணத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்று கடுமையாக சாடியுள்ளார்.

முன்னதாக சீனா இந்த வைரஸ் பரப்பியதன் பின்னணியில் உலக பொருளாதாரத்தை சரிப்பதற்கான சூழ்ச்சி என்றும், அமெரிக்காவினை வீழ்த்துவதற்கான சதி என்றும் சர்வதேச ஊடகங்கள் பல கட்டுரைகளை எழுதியிருப்பதுடன், சீனாவை கடுமையாக விமர்சித்தும் இருந்தன.

இந்த நிலையில் உலக நாடுகள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய பொருளாதார வர்த்த முகத்தை காட்டுவது உலக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி