பூரண குணமடைந்து திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று: கலக்கத்தில் நிபுணர்கள்

132shares

தென் கொரியாவில் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது நிபுணர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த Daegu நகரிலேயே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதில் நோயாளிகளுக்கு நோய் பரவியதல்ல எனவும் அவர்களுக்குள் இருந்த வைரஸ் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்திருக்கலாம் என தென் கொரிய நிபுணர்கள் குழு கணித்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் மனித உயிரணுக்களில் கண்டறிய முடியாத அளவில் செயலற்றதாக மறைந்திருக்க வாய்ப்புண்டு எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இன்னொரு நிபுணர் தென் கொரிய நிபுணர்களின் கருத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததுடன், அந்த 51 நோயாளிகளும் நோய் குணமடைந்ததாக கண்டறியப்பட்ட மாதிரிகளில் பிழை நேர்ந்திருக்கலாம் என்கிறார்.

தற்போதைய சூழலில், 20 முதல் 30 சதவீத வழக்குகளில் தவறான முடிவுகள் வெளிவர சாத்தியமிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நோயின் அறிகுறிகள் இல்லை என்பதால் அவர்கள் 51 பேரும் தவறாக விடுவிக்கப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் அவர்களின் நோய் தீவிரமடைந்திருக்கலாம் என்றார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ள சுகாதார நிபுணர்கள் குழு ஒன்று Daegu நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று மேலும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகள்,

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!