கொரோனா இரகசியங்களை மறைத்த சீனா! பின்னணியில் நடந்த மர்மங்கள் என்ன?

422shares

கொரோனா வைரஸ் தொடர்பில் பல இரகசியங்களை சீனா மறைத்துள்ளதாகவும், அதற்கு உலக சுகாதார அமைப்பும் துணை போயிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமெரிக்க அரசாங்கம் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைக்கத் தொடங்கியிருக்கிறது.

இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பு சீனாவை மையப்படுத்தி செயல்படுகிறது என்று கூறி அதற்கான அமெரிக்க நிதிப்பங்களிப்பை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கொரோனா விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் உலகிற்கு மறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க செனேட்டர் ஜிம் ரிஸ்ச், உலகச் சுகாதார அமைப்பின் மீது தனிப்பட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று தற்போது அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராவதாக குறிப்பிட்டுள்ளார்.

செனேட்டின் வெளியுறவு குழுவின் தலைவரான, ஜிம் ரிஸ்ச் கூறும்போது, “உலகச் சுகாதார அமைப்பு அமெரிக்க மக்களை மட்டுமல்ல கோவிட்-19 விவகாரத்தை அது கையாண்ட விதத்தில் உலகையே தோற்கச் செய்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்டர் டெட்ர்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் உலகச் சுகாதாரத்தின் குறைந்த பட்ச வெளிப்படைத்தன்மையைக் கூட சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலியுறுத்தவில்லை. உலகம் கொரோனா கொள்ளை நோயைத் தடுக்கும் திறனையும் இதன் மூலம் மறைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு என்ற பெயரை வைத்து கொண்டு சீன அரசின் அரசியல் கைப்பாவையாக அது மாறியதை முற்றிலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது

எனவே கோவிட்-19-ஐ உலகச் சுகாதார அமைப்பு கையாண்ட விதம் குறித்த தனிப்பட்ட விசாரணை தேவை. எங்களது வரிசெலுத்தும் மக்களின் மதிப்பு மிக்க டாலர்கள் நோய்ப்பரவலைத் தடுப்பதற்கான முதலீடாக இருக்க வேண்டுமே தவிர நோயை மறைப்பதற்கும் பலர் உயிரிழப்பதற்குக் காரணமான செயல்களுக்கும் உதவுவதாக இருந்து விடக்கூடாது” என்று கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துப் பேசியிருக்கிறார்.

அதே போல் பிற செனேட்டர்களும் செவ்வாயன்று உலகச் சுகாதார அமைப்புக்கு அமெரிக்க நிதிப்பங்களிப்பை நிறுத்தி வைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் கேப்ரியேசஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கை ரெஸ்செந்தலர் என்பவர் கருத்து வெளியிடுகையில், “கோவிட்-19 அச்சுறுத்தலை சீன கம்யூனிஸ்ட் கட்சி மறைக்க உலகச் சுகாதார அமைப்பு துணை புரிந்தது. இப்போது 12,000 அமெரிக்கர்கள் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் வாரங்களில் கடுமையாக உயரவிருக்கிறது.

அந்த அமைப்புக்கு அமெரிக்காதான் அதிக பங்களிப்பு செய்து வருகிறது, எங்கள் மக்களின் வரிப்பணம் சீனாவின் பொய்களுக்கும், தகவல் மறைப்புக்கும் பயன்படுதல் கூடாது. தகவல்கள் வெளிப்படையாகியிருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். இந்த மசோதா உலகச் சுகாதார அமைப்பை அதன் அலட்சியத்துக்கும் ஏமாற்று வேலைக்கும் பொறுப்பாக்கும்” என்று ஆவசத்தோடு பேசியிருக்கிறார்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை தாண்டியுள்ளதுடன், பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தொட்டுள்ளமை அந்நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

எவ்வாறாயினும், கொரோனாவால் அமெரிக்காவில் 2 லட்சம் மக்களை இழக்கப் போகிறோம் என்று முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி