கொரோனாவால் தொடரும் பனிப்போர் -அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

605shares

கொரோனா நோயாளிகள் முதலில் கண்டறியப்பட்ட வுஹான் மாகாணத்தின் உண்மையான நிலைமையை மறைக்க சீனா முயற்சிக்கிறது என அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இந்த குற்றச்சாட்டுகள் "நியாயமற்ற மற்றும் உண்மைத்தன்மையற்றவை" எனத் தெரிவித்துள்ளார்.

சீனா திறந்த, வெளிப்படையான தகவல்களை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பற்றி அறிய சிறிது காலம் எடுத்துள்ளதாக சீனா கடந்த ஆண்டு பிற்பகுதியில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

புதன்கிழமை, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, வுஹானின் பரவலின் அளவு குறித்து சீனா வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

இதற்கு இன்று வியாழக்கிழமை, பதிலளித்த லிஜியன், இந்த வைரஸ் முதலில் வுஹானில் பரவியதற்கான உண்மையான சான்று இல்லை, ஆனால் உலகின் எந்த நகரம், நாடு அல்லது பிராந்தியத்திற்கும் பரவக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்