தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து சென்ற சிறுமி; குவியும் பாராட்டுக்கள்

142shares

காயமுற்ற தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை அழகிய சாதனை என அமெரிக்க ஜனாதிபதியின் மகள் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருகையில்,

அரியானாவின் குர்கோவான் நகரிலிருந்து காயமடைந்த தனது தந்தையை சைக்கிளில் அமரவைத்து 15 வயதான சிறுமி ஜோதி குமாரி 1,200 கி.மீ தொலைவில் உள்ள சொந்த மாநிலமான பீகாருக்கு 10 நாட்களில் அழைத்து வந்து பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஜோதி குமாரியின் சைக்கிள் ஓட்டும் திறமை குறித்து அறிந்த தேசிய சைக்கிள் பந்தைய கூட்டமைப்பின் தலைவர் ஓங்கர் சிங், லாக்டவுன் முடிந்தபின் அவரை டெல்லிக்கு பயிற்சிக்காக அழைத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகள் மற்றும் ஆலோசகர் இவான்கா டிரம்ப் ஜோதி குமாரியின் செயலை பாராட்டியுள்ளார்.

அவர் தனது டுவிட்டில் கூறி இருப்பதாவது:

"15 வயது ஜோதி குமாரி, தனது காயமடைந்த தந்தையை 7 நாட்களில் +1,200 கி.மீ தூரம் தனது சைக்கிளின் பின்புறத்தில் வைத்து தங்கள் சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். சகிப்புத்தன்மை மற்றும் அன்பின் இந்த அழகான சாதனை இந்திய மக்களின் கற்பனையையும் சைக்கிள் கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது என கூறி உள்ளார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி