இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

481shares

இந்தியாவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்திய - சீன எல்லையில் சீனா படைகளை குவித்து வருவதால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது.

இதனை தொடர்ந்து இந்தியாவும் எல்லையில் படைகளை குவிக்கிறது.

இந்நிலையில் இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையான ராக்சிக்ரி பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சிறிய ரக ஆளில்லா உளவு விமானம் பாக். பகுதிக்குள் 650 மீட்டர் தூரத்துக்கு ஊடுருவியது.

அதை பாக். படையினர் சுட்டு வீழ்த்தினர் என அந்நாட்டு இராணுவ செய்தி தொடர்பாளர் பாபர் இப்திகர் கூறினார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து பாக். பிரதமர் இம்ரான் கான் பதிவிட்ட டுவிட்டில்

“பா.ஜ. கட்சியை சேர்ந்த இந்திய பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா மேற்கொள்ளும் விரிவாக்க கொள்கை அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது” என பதிவிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்