பாகிஸ்தானில் சட்டசபை உறுப்பினர் கொரோனாவுக்கு பலி

15shares

பாகிஸ்தானில் கொரோனா தீவிரமாக பரவி வரும்நிலையில் கொரோனாதொற்றி எம்.எல்.ஏ. ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

கைபர் பக்துங்வா மாகாண சட்டசபை உறுப்பினரான மியான் ஜாம்செட் காகாகேல் (வயது 65) என்பவரே நேற்று கொரோனா தொற்றால் மரணம் அடைந்தவராவார்.

இவர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தொற்று உறுதியானது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உடல் நிலை மோமானதால் கடந்த 3 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார்.

நேற்று முன்தினம் சிந்து மாகாண அமைச்சர் கொரோனாவால் பலியானது குறிப்பிடத்தக்கது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!