அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

1727shares

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பென்டகனை எதிர்த்து பேசி இருந்ததை தற்போது அந்நாட்டு ராணுவம் மிக கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறது.

இதனால் அதிபருக்கும் இராணுவத்திற்கும் இடையிலான மோதல் முற்றி இருக்கிறது.

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டது மொத்தமாக அந்த நாட்டை உலுக்கி உள்ளது.

இதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிலைகுலைந்து போய் உள்ளார்.

அவருக்கு எதிராக மிக கடுமையான போராட்டங்கள் அந்த நாட்டில் கடந்த 8 நாட்களாக நடந்து வருகிறது.

போராட்டங்களை கட்டுப்படுத்த அதிபர் ட்ரம்ப் அங்கு தேசிய பாதுகாப்பு படையை களமிறக்கி உள்ளார். அதோடு அங்கு ராணுவத்தை களமிறக்க முயன்று வருகிறது.

ஆனால் அமெரிக்க அரசின் விதிப்படி அமெரிக்க மண்ணுக்குள் ராணுவத்தை களமிறக்க முடியாது. இதனால் Insurrection Act என்ற அவசர சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்து அங்கு ராணுவத்தை களமிறக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.

ஆனால் இதை அந்நாட்டு ராணுவ ஜெனரல் கடுமையாக எதிர்த்து இருக்கிறார். அமெரிக்க ராணுவத்தின் ஜெனரல் மார்க் மில்லிதான் அங்கு ராணுவத்தை கட்டுப்படுத்தும் தலைமை பொறுப்பில் இருப்பவர்.

இவர் ராணுவத்தை களமிறக்கும் ட்ரம்பின் முடிவை கடுமையான விமர்சனம் செய்து இருக்கிறார்.

அமெரிக்காவில் ராணுவத்தை களமிறக்க இவர் கடுமையாக எதிர்த்தார். இதனால் வாஷிங்டன் வரை வந்த அமெரிக்கா ராணுவப்படை திரும்பி சென்றது.

அமெரிக்க அதிபர் ராணுவத்தை களமிறக்க உத்தரவிட்டும் இப்படி நடந்தது. அந்நாட்டு அதிபருக்கு எதிராக தற்போது அந்நாட்டு ராணுவம் களமிறங்கி பேசி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ராணுவ புரட்சிக்கு வித்திடுமா என்று கேள்வி எழுந்துள்ளன.

இன்னொரு பக்கம் அமெரிக்க மண்ணில் ராணுவத்தை கொண்டு வர கூடாது என்று பென்டகன் மிக உறுதியாக கூறி உள்ளது. பென்டகன் தலைவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர், என்ன நடந்தாலும் ராணுவத்தை உள்ளே கொண்டு வர கூடாது என்று கூறியுள்ளார்.

முதல்முறை பென்டகன் இப்படி நேரடியாக ட்ரம்பை எதிர்த்து உள்ளது. இப்படி அனைத்து பக்கமும் விழும் அடி ட்ரம்பை நிலைகுலைய வைத்துள்ளது.


you may like this
இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்