அத்துமீறி நுழைந்த போர் விமானங்கள்! நடுவானில் நடந்தது

119shares

அமெரிக்காவின் அலாஸ்கா வான்வெளியில் அத்துமீறி பறந்த ரஷ்யாவின் இராணுவ விமானத்தை அமெரிக்காவின் போர் விமானங்கள் தடுத்து நிறுத்தியுள்ளன. இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வட அமெரிக்கா வான்வெளி பாதுகாப்பு கட்டளையகம் தனது செய்திக் குறிப்பில் கூறுகையில்,

ரஷ்யாவின் விமானங்கள் அமெரிக்கா அல்லது கனடாவின் வான் வெளியில் நுழையவில்லை. எனினும் அலாஸ்காவின் எல்மென்டார்பில் உள்ள விமான தளத்திலேயே அவற்றை அமெரிக்காவின் எஃப்-22 ரக போர் விமானங்கள் தடுத்து நிறுத்தின என்று தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் டியூ 142 ரக விமானம் இதுவரை 10 முறை அத்துமீறி அமெரிக்காவில் பறந்ததற்காக இடைமறித்து திருப்பி அனுப்பப்பட்டது. இதேவேளை ரஷ்யாவில் கடந்த ஜூன் 19-ஆம் திகதி ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையோரத்தில் பறந்த அமெரிக்காவின் இரு பி 52 எனும் குண்டு வீசும் திறனுடைய விமானங்களை ரஷ்யா வானில் இடைமறித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று அமெரிக்காவின் எல்லைக்குள் வந்த ரஷ்யாவின் டியூ 142 எனப்படும் டூபோலெப் டியூ 142 ரக விமானம் கடல் பகுதியில் ரோந்து செய்யும் விமானமாகும். இவை நீரில் முழ்கி குண்டுவீசும் திறன் கொண்டவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனா தொற்று அறிகுறியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இளைஞன்!

கொரோனா தொற்று அறிகுறியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இளைஞன்!