ட்ரம்ப் உட்பட யாராக இருந்தாலும் பதிவுகள் முடக்கப்படும்! பிரதமர் மஹிந்த விடுத்துள்ள கோரிக்கை

78shares

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் பதிவுகள் மக்களை திசை திருப்பும் வகையில், தவறானதாக காணப்படும் போது அந்த பதிவுகள் முடக்கப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது. டுவிட்டருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் ஏற்கனவே மோதல் போக்கு நிலவுகிறது.

அவருடைய சமீபத்திய பல பதிவுகளை டுவிட்டர் நீக்கியது. ஆனால், பேஸ்புக் அதை செய்ய மறுத்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட எந்த அரசியல்வாதியாக இருந்தாலும், அவர்கள் பதிவிடும் திசை திருப்பும் செய்திகள் தவறானவை என குறியீடு செய்யப்படும் என்றும், மிகவும் தகுதியற்றவை முடக்கப்படும் என்றும் பேஸ்புக் நிர்வாகம் நேற்று திடீரென அறிவித்தது.

இது தொடர்பாக இதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜூகர் பெர்க் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த புதிய விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. இந்த விதிமுறைகளை மீறும் வகையில் பதிவுகளை வெளியிட்டால், அதிபர் ட்ரம்ப் உட்பட யாராக இருந்தாலும் அது முடக்கப்படும் அல்லது தவறானவை என குறியீடு செய்யப்படும்.

அமெரிக்க தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் வெளியாகும் , தவறான தகவல்கள் தடை செய்யப்படும். தேர்தல் நடப்பதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக, உள்ளூர் வாக்குப்பதிவு நிலவரங்கள் குறித்த தவறான தகவல்கள் அகற்றப்படும்,’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல முக்கிய செய்திகளை அறிந்து கொள்ள கீழுள்ள காணொளியை தொடருங்கள்...

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!