தென்சீனக் கடலில் மோதல் போக்கு உக்கிரம்! கடும் சீற்றத்தில் சீனா

449shares

அவுஸ்திரேலியாவுக்கும் சீனாவிற்கும் இடையேயான மோதல் போக்கு தற்போது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொடக்க காலத்திலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது.

தென்சீனக் கடல் எல்லைப் பகுதியில் 90 வீதமான பகுதியை சீனா மொத்தமாக ஆரம்பித்தாலும் தற்போது சர்வதேச கடல் பகுதியையும் சேர்த்து சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

அதிக எண்ணெய் வளம் மற்றும் பொருளாதார வர்த்தக போக்குவரத்தை கருத்தில் கொண்டு சீனா இவ்வாறு உரிமை கொண்டும் நிலையில், இதனை தடுக்கும் பொருட்டு அமெரிக்காவும் தனது படைகளை அனுப்பி இத்தகைய சீனாவின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தான் சீனா மீது இருக்கும் கோபத்தில் அவுஸ்திரேலியா அமெரிக்காவுடன் இணைந்து தென்சீனக் கடல் எல்லைப் பகுதியில் களம் இறங்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் 04 போர்க்கப்பல்கள் ரோந்து பணிகளை மேற்கொண்டுள்ளது. இது சீனாவை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனால் உள்நாட்டு பிரச்சினையில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் இல்லையென்றால் அவுஸ்திரேலியா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சீனா எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் சீனா மிகவும் தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருவதுடன், 6 இற்கும் அதிகமான போர்க்கப்பல்களில் தீவிரமான பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்