தொடர்ச்சியாக இடம்பெற்ற மர்ம மரணங்கள்! வெளியான அதிர்ச்சிப் பின்னணி

193shares

போட்ஸ்வானாவில் நூற்றுக்கணக்கான யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் வெளிவந்துள்ளன.

உயிரிழந்த யானைகளின் உடலில் இருந்து பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக தென்னாபிரிக்கா, சிம்பாப்வே, கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தன.

இந்த ஆய்வில் யானைகளுக்கு பரவிய தொற்று நோய் காரணமாகவே அவை உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. எனினும், அடுத்தக்கட்ட ஆய்வுக்கு தயாராகி வருவதாக, போட்ஸ்வானா வன விலங்குகள் நலத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தெற்கு ஆபிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் 350இற்க்கும் அதிகமான யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. நாட்டின் ஒகவாங்கோ டெல்டா பகுதியில் தான் இந்த மர்ம மரணங்கள் பதிவாகின.

உலகிலேயே அதிக யானைகளை கொண்ட நாடுகள் பட்டியலில் போட்ஸ்வானா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான யானைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அங்கு இருந்த யானைகள் திடீரென உயிரிழக்க ஆரம்பித்தன. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்

யானைக்கள் குடிக்கும் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொடிய பாக்டீரியா கிருமி பரவுகிறது. அந்த தண்ணீரை யானைகள் பருகும் போது, அதன் மூலமாக தொற்று ஏற்பட்டே இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நச்சுநிறைந்த பாக்டீரியா கிருமி மூலமாக நோய் தொற்று ஏற்பட்டமையினால் இயற்கையான நச்சு மூலமாகவே யானைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்