அடுத்தடுத்து அதிரடி தாக்குதல்களை தொடுத்த விமானப் படை! பலர் கொல்லப்பட்டதாக தகவல்

843shares

சிரியாவில் நேற்று இஸ்ரேல் விமானப்படையினர் முன்னெடுத்த வான் தாக்குதலில் ஈரானிய ஆதரவு போராளிகள் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை போர் தொடர்பில் கண்காணித்து வரும் அதிகாரிகள் குழு வெளியிட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் ஈரானை சேர்ந்த எட்டு பேரும், சிரியாவை சேர்ந்த இரண்டு பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்தோடு அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் இஸ்ரேலிய விமானப்படை தகர்த்துள்ளது.

முன்னதாக கடந்த 3 ஆம் திகதியன்று சிரியாவின் கிழக்கு பகுதியில் இருந்த 16 கிளர்ச்சியாளர்களை இஸ்ரேல் விமானப்படை கொன்றது.

சிரியாவில் கடந்த 2011 முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் சுமார் 380,000 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

பல லட்சம் பேர் அடைக்கலம் தேடி பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

பகல்கனவு காணும் கோட்டாபய அரசு - ஒருநாளும் நிறைவேறாது! சரத் பொன்சேகா சூளுரை

பகல்கனவு காணும் கோட்டாபய அரசு - ஒருநாளும் நிறைவேறாது! சரத் பொன்சேகா சூளுரை