முககவசம் அணியவில்லையா? விதிக்கப்படும் நூதன தண்டனை

103shares

உலகை அச்சுறுத்திவரும் கொடிய கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க உலக நாடுகள் தீவிர கவனம் செலுத்திவருகின்றன.

அந்த வகையில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என பல்வேறு நாடுகள் அறிவித்தும் உள்ளன.

இந்த நிலையில் கொரோனா பாதுகாப்புக்கு முகக்கவசம் அணியாமல் பொலிசாரிடம் சிக்கினால் தண்டனையாக கல்லறைகளை தோண்டவேண்டும் என்று இந்தோனேஷியாவில் நூதன தண்டனை வழங்கப்படுகிறது.

இந்தோனேஷிய நாட்டின் கிழக்கு ஜாவாவில் முகக்கவசம் இல்லாமல் பிடிபட்ட நபர்கள் தண்டனையாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கல்லறைகளை தோண்டுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

" கொரோனா பாதித்து மரணமடைபவர்களை அடக்கம் செய்ய, குழிகள் தோண்டுவதற்கு எங்களிடம் தற்போது மூன்று பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். எனவே முகக்கவசம் அணியாமல் பிடிபடும் நபர்களை அவர்களுடன் வேலை செய்ய வைக்கலாம் என்று திட்டமிட்டேன்" என்று செர்ம் மாவட்டத் தலைவர் சுயோனோ கூறினார்.

கொரோனா காலத்தில் முகக்கவசம் மிகவும் அத்தியாவசியமானது. எனவே இந்த தண்டனையானது விதிமீறல்களுக்கு எதிராக ஒரு தடுப்பு விளைவை உருவாக்கும் என்று நம்புகிறேன்," என்றும் அவர் கூறினார்.

ஜாவா நகரில் அமுல்படுத்தப்படும் நூதனமான இந்த தண்டனை மக்கள் மத்தியில் முகக்கவசம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கியுள்ளதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்