உலக நாடுகளை அதிர வைக்கும் சீனா! மரண பயத்தை காட்டும் காணொளி - பீதியில் சர்வதேச நாடுகள்

714shares

உலகம் முழுவதும் கொரோனா கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கையில், மறுபக்கம் கொரோனோவிலிருந்து மீண்ட சீன ஆயுத தயாரிப்பில் அசுற வளர்ச்சியை நோக்கி நகர்வதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சத்தமில்லாமல் ஆயுத உற்பத்தியில் சீனா வேகமெடுப்பது, சர்வதேச நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறிவருகிறது.

இதற்கு எடுத்துக்காட்டாக, எதிரி நாடுகளுக்கு மரண பயத்தை காட்டும் புதிய ஆயுதம் ஒன்றை சீனா காணொளி வடிவில் வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் வெளியான காணொளியில், லொறி ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள அந்த ஆயுதமானது, ஆளில்லா குட்டி விமானங்களை ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த குட்டி விமானங்கள் போர்முனையில் எதிரி நாடுகளின் இராணுவ டாங்கிகள் அல்லது இராணுவ முகாம்கள் மீது தாக்குதலை தொடுக்கும் என கூறப்படுகிறது.

இந்த கதிகலங்கவைக்கும் ஆயுதத்தை ஹெலிகொப்டர் மூலம் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்பது சிறப்பு. தைவானுக்கு எதிராக தற்போது இராணுவப் பயிற்சியை முன்னெடுத்திருக்கும் சீனா அச்சுறுத்தும் இந்த புதிய ஆயுதத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஒரே நேரத்தில் 48 ஆயுதம் தாங்கிய ஆளில்லா குட்டி விமானத்தை இதன் மூலம் ஏவ முடியும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு குட்டி விமானமும் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதத்துடன் ஏவப்படுகிறது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பேரழிவை ஏற்படுத்த முடியும்.

மேலும் 40 நிமிடங்கள் வரை வானத்தில் பறந்து இலக்கை எட்டும் வகையில் இந்த புதிய ரக ஆயுதம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, ஒரு ராணுவ வீரரால், இந்த குட்டி விமானங்கள் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இக்காணொளியால் சர்வதேச நாடுகள் விழி பிதுங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க
வரலாற்று தவறை செய்யப் போகிறீர்களா? ஸ்ரீலங்கா வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று

வரலாற்று தவறை செய்யப் போகிறீர்களா? ஸ்ரீலங்கா வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று

ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்