கொரோனா தொற்று பாதிக்கும் வாய்ப்பு குறைவாக உள்ள இரத்தப்பிரிவினர் யார்?

165shares

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கும் வாய்ப்பு ஓ குரூப் இரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு குறைவாக உள்ளதாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா ஆபத்து காரணிகளை அடையாளம் காண விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.கொரோனா ஆபத்தை முன்னறிவிப்பதில் "இரத்த வகையின் சாத்தியமான பங்கு குறித்து 2 ஆய்வுகள் நடைபெற்றன.

ஓடென்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகம் இந்த ஆய்வுகளை நடத்தின.

வேறு எந்த இரத்த வகையையும் விட 'ஓ' இரத்தப் பிரிவு உள்ளவர்கள் குறைவாக பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது.

இரண்டு ஆய்வுகளிலும் ஓ ரத்தப்பிரிவை சேர்ந்தவர்கள் கொரோனா அல்லது சார்ஸ், கோவ்-2 நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக தெரியவந்து உள்ளது.

இந்த புதிய ஆய்வுகள் கொரோனாவுடன் இரத்த வகைக்கும் பாதிப்புக்கும் இடையிலான சாத்தியமான தொடர்புக்கான சான்றுகளை வழங்கினாலும், இருந்தாலும் கொரோனா தொற்று ஏன் ஏற்படுகிறது என்பதை அறிந்துகொள்ள கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று அறிவியல் இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களை பரிசோதித்ததில் ஓ இரத்தப்பிரிவை சேர்ந்தவர்கள் கணிசமாகக் குறைவாகவே காணப்பட்டனர்" என்றும், "மாறாக, அதிகமாக ஏ, பி மற்றும் ஏபி இரத்த பிரிவு நபர்கள் அதிகமாக காணப்பட்டனர்" என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

அதாவது, ஏ, பி, அல்லது ஏபி இரத்த வகைகளைக் கொண்ட நபர் கொரோனா நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்தில் இருக்கிறார்.இருப்பினும், ஆராய்ச்சியாளர்கள் ஏ, பி மற்றும் ஏபி வகைகளுக்கு இடையிலான தொற்று விகிதத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் காணவில்லை.

இந்த ஆய்வு ஏபிஓ இரத்தக் குழுவை சார்ஸ், கோவ்-2 நோய்த்தொற்றுக்கான ஆபத்து காரணியாக அடையாளப்படுத்துகிறது.

மற்றொரு சமீபத்திய ஆய்வில், ஓ அல்லது பி இரத்தக் குழுக்களுடன் ஒப்பிடும்போது. ஏ அல்லது ஏபி இரத்தப்பிரிவை சேர்ந்த கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு உள்ள நோயாளிகளுக்கு செய்ற்கை சுவாசம், சி.ஆர்.ஆர்.டி மற்றும் ஐ.சி.யுவில் நீண்ட காலம் தங்குவதற்கான அதிக ஆபத்து உள்ளது. அவர்களுக்கு கொரோனாவால் அதிக நுரையீரல் பாதிப்பு இருப்பதாகக் கூறுகிறது.

சிறுநீரக செயலிழப்புக்கு டயாலிசிஸ் தேவைப்படும் இரத்தக் குழு ஏ மற்றும் ஏபி நோயாளிகளையும் அவர்கள் கண்டறிந்தனர்.இதன் பொருள், இரத்தக் குழு ஓ ரத்தப்பிரிவு உடையவர்களுக்கு கொரோனா கடுமையான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பில்லை.

"இந்த கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படை உயிரியல் வழிமுறைகளை வரையறுக்க மேலும் ஆராய்ச்சி தேவை" என்று அது கூறியது.இந்த ஆய்வை பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்தி உள்ளது.

இந்த இரண்டு ஆய்வுகள், ஏ மற்றும் ஏபி ஆகிய இரண்டு இரத்தப் பிரிவுகளில் உள்ள நோயாளிகளுக்கு கொரோனா காரணமாக உறுப்பு செயலிழப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம் என்று கூறுகிறது.

இரத்த வகை ஓ ரத்தப்பிரிவு உள்ளவர்கள் உலகளாவிய ரத்த நன்கொடையாளர்கள் - அவர்கள் தங்கள் இரத்தத்தை அனைத்து பிரிவு ரத்த குழுக்களுக்கும் தானம் செய்யலாம். இருப்பினும், அவர்கள் ஓ வகை இரத்தத்தை மட்டுமே பெற முடியும்.

இரத்த வகை ஓ பிரிவு உடையவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து குறைவு என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனா தொற்று அறிகுறியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இளைஞன்!

கொரோனா தொற்று அறிகுறியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இளைஞன்!