அமெரிக்கா மீது பொருளாதார தடை - சீனாவின் எச்சரிக்கையால் பரபரப்பு

636shares

தாய்வானுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்தால் அமெரிக்கா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என சீனா எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனா – தாய்வான் இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில் தாய்வானுக்கு அமெரிக்கா உதவுவதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

தாய்வானுடனான எல்லை ஆக்கிரமிப்பு பிரச்சினை தொடர்பாக சீனா தனது எல்லையில் ஆயுதங்களை நிறுத்தி தாய்வானை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தாய்வானுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை தாய்வான் ஜலசந்தியில் கொண்டு செல்வது, உளவு விமானங்களை சீன எல்லையில் பறக்க விடுவதோடு மட்டுமல்லாமல், தாய்வானோடு ஏற்படுத்தியுள்ள இராணுவ ஒப்பந்தத்தின்படி ஆயுதங்களையும் வழங்கி வருகிறது.

அண்மையில் வான்வழி தாக்குதல் ஏவுகணைகளை அமெரிக்காவிடம் வாங்க தாய்வான் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில் தாய்வானுக்கு ஆயுதங்கள் விற்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தாய்வானுடன் ஆயுத வியாபாரத்தில் ஈடுபடும் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து சீனா ஆயுதங்கள் வாங்கப் போவதில்லை என்றும், அந்நிறுவனங்களுக்கு சீனாவில் பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்