அடுத்தடுத்து குண்டு மழை பொழிந்த விமானங்கள்! நிர்மூலமாக்கப்பட்ட ஆயுதக் கிடங்குகள் - 17 பேர் பலி

477shares

தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகள் மீது போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கட்டார் தலைநகர் டோஹாவில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இராணுவ வீரர்களையும் பொலிசாரையும் குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதற்குப் பதிலடியாக இராணுவமும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள வார்டாக் மாகாணத்தின் சயீத் அபாத் மாவட்டத்தில் இராணுவம் அதிரடி வான் தாக்குதலை நடத்தியது.

தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகள் மீது போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் தலீபான் பயங்கரவாதிகள் 17 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இதேவேளை, பல பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர். அதுமட்டுமின்றி பயங்கரவாதிகளின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டன.


You may like this

Tags : #War #Death
இதையும் தவறாமல் படிங்க
யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்