மிக ஆழமான கடலுக்குள் சீனக்கப்பல்! அமெரிக்காவின் சாதனையை முறியடிக்க திட்டம்

298shares

பூமியின் மிக ஆழமான கடலடிப் படுகையை ஆராய்ச்சி செய்வதற்கு சீனா நீர்மூழ்கிக் கப்பலொன்றை அனுப்பியுள்ளது.

இந்த ஆராய்ச்சி, பசிபிக் பெருங்கடலில், நீரின் மேல்மட்டத்தில் இருந்து பத்தாயிரம் மீற்றர் ஆழங்கொண்ட மரியானா ட்ரெஞ்ச் என்னும் பகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடல் பகுதியில் உயிர்ச் சூழல் பற்றிய மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்வதற்கும் சீனா திட்டமிட்டுள்ளது.

இதற்காக, பென்டூஸ் எனப்படும் நீர்மூழ்கிக் கப்பலை மூன்று ஆராய்ச்சியாளர்களுடன் சீனா அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.

கடலுக்கு அடியில் உள்ள மாதிரிகளைச் சேகரிக்கும் வகையில் இந்த நீர்மூழ்கிக் கப்பலில் இயந்திரக் கைகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் அங்குள்ள காட்சியைக் கண்டறிய மீயொலித் தொழில்நுட்பத்துடன் கூடிய கமெராக்களும் இணைக்கப்பட்டுள்ளன.

குறித்த பென்டூஸ் கப்பல் ஏற்கனவே இம்மாதத்தின் தொடக்கத்தில் கடலுக்கு அடியில் சென்று பத்தாயிரத்து 909 மீற்றர் ஆழத்துக்குச் சென்று சாதனை படைத்துள்ளது.

எனினும், 2019ஆம் ஆண்டில் அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் ஆழ் கடலுக்குச் சென்று ஏற்படுத்திய 10 ஆயிரத்து 927 மீற்றர் என்ற உலக சாதனையை குறித்த சீனக் கப்பல் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

நிலாவரையில் அகழ்வு மேற்கொண்டவர்கள் இவர்களே! பகிரங்கப்படுத்திய சிவாஜி

நிலாவரையில் அகழ்வு மேற்கொண்டவர்கள் இவர்களே! பகிரங்கப்படுத்திய சிவாஜி

தன் வினை தன்னைச் சுடும்! பற்ற வைத்த நெருப்பு - சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கா அரசு?  ஹரிகரன்

தன் வினை தன்னைச் சுடும்! பற்ற வைத்த நெருப்பு - சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கா அரசு? ஹரிகரன்