ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

346shares

ஈராக்கில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் தலைமை அணு விஞ்ஞானியான மொசென் பக்ரிசாதே கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர் தெஹ்ரானில் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தலைமை அணு விஞ்ஞானி கொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் ஈராக்கில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருப்பினும் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரியின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை.

அவர் ஈராக்-சிரியா எல்லையில் காரில் சென்று கொண்டிருந்தபோது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,இந்த தாக்குதலில் அவருடன் மேலும் 3 பேர் உயிரிழந்ததாகவும் ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த இராணுவ அதிகாரி கொல்லப்பட்ட பகுதி ஒரு காலகட்டத்தில் ஐ.எஸ் அமைப்பின் கீழ் இருந்ததாகும், ஆனால் தற்போது ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் துணையுடன் சிரியா ராணுவம் அந்த பகுதியை கைப்பற்றியுள்ளது.

அணு விஞ்ஞானியின் படுகொலையின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள ஈரான் அணு விஞ்ஞானியின் கொலைக்கு பழி தீர்ப்போம் என ஈரான் தலைவர்கள் சூளுரைத்த சில மணி நேரங்களிலேயே, ஈராக்கில் இன்னொரு முக்கிய இராணுவ அதிகாரி கொல்லப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இந்த சம்பவம் குறித்து ஈரான் தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

ஈராக்கில் ,ஈரானின் இராணுவத்தளபதி அபு குவாசி சுலைமான் இந்த வருடம் ஜனவரி மாதம் 03 ஆம் திகதி ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Tags : #Iran #Army #Death
இதையும் தவறாமல் படிங்க
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

நீதிமன்ற உத்தரவு! பிடுங்கி எறியப்பட்ட தற்காலிக கொட்டகை - குழந்தையுடன் இரவுவேளை நடுத்தெருவில் நின்ற குடும்பம்

நீதிமன்ற உத்தரவு! பிடுங்கி எறியப்பட்ட தற்காலிக கொட்டகை - குழந்தையுடன் இரவுவேளை நடுத்தெருவில் நின்ற குடும்பம்

இதுபோன்ற சம்பவம் இனிமேல் நிகழக்கூடாது -கோட்டாபய அரசுக்கு புதுடெல்லியிலிருந்து வந்த கடும் எச்சரிக்கை

இதுபோன்ற சம்பவம் இனிமேல் நிகழக்கூடாது -கோட்டாபய அரசுக்கு புதுடெல்லியிலிருந்து வந்த கடும் எச்சரிக்கை