ஏழு கப்பல்களில் ஏற்றப்பட்டு தனித்தீவில் இறக்கிவிடப்பட்டுள்ள அகதிகள்

681shares

வங்கதேசத்தில் இருக்கும் 1500க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் தொலைதூர தீவுக்கு பலவந்தமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ரோஹிங்கியா அகதிகளை தீவுக்கு அனுப்பக்கூடாது என மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் வங்கதேச அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஏழு கப்பல்களில் 1642 ரோஹிங்கியா அகதிகள் ஏற்றப்பட்டனர். சிட்டகொங் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இக்கப்பல்கள் பாஷன் சார் என்ற தீவில் அகதிகளை இறக்கியுள்ளது.

வங்கதேசத்தில் இருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த தீவு ஒரு காலத்தில் மழைநீரால் மூழ்கியிருந்தது.

வங்கதேசத்தின் 1.12 கோடி டொலர் செலவில் இத்தீவில் வெள்ள கட்டுப்பாட்டு அமைப்புகள், வீடுகள், மருத்துவமனைகள், மசூதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. தீவுக்கு சென்ற அகதிகளுக்கு மதிய உணவுக்கு அரிசி, முட்டை, கோழிக் கறி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக அகதிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டுள்ளது. கப்பலில் ஏறியபோது அனைத்து அகதிகளுக்கும் மாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

தீவுக்கு செல்லலாமா வேண்டாமா என்பதை சுதந்திரமாக முடிவெடுக்க அகதிகளுக்கு அனுமதியளிக்க வேண்டுமென வங்கதேசத்தை ஐநா வலியுறுத்தியுள்ளது. ஆனாலும், ஆயிரக்கணக்கில் அகதிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். இந்த தீவுக்கு வெளிநாட்டு ஊடகங்கள் செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
பழிக்குப் பழி தீர்ப்போம்! ட்ரம்பிற்கு பகிரங்க மிரட்டல்

பழிக்குப் பழி தீர்ப்போம்! ட்ரம்பிற்கு பகிரங்க மிரட்டல்

உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்போம்!  சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை

உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்போம்! சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை

அடுத்த அமெரிக்க அதிபராவார் கமலா ஹாரிஸ் - வெளியான அறிவிப்பு

அடுத்த அமெரிக்க அதிபராவார் கமலா ஹாரிஸ் - வெளியான அறிவிப்பு